ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை கிளப்பிய நடிகர் சிம்புவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.! - Seithipunal
Seithipunal


ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை கிளப்பிய  நடிகர் சிம்புவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. இவருடைய இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது.

ராஜ்கமல் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. 

இந்த நிலையில், இந்த படத்திற்கான லோகேஷன் பார்க்கும் பணியில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ஈடுபட்டுள்ளார். மிகப்பெரிய வரலாற்று படமாக உருவாகும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. 

தமிழ், தெலுங்கு, இந்தி என்று ஐந்து மொழியில் பான் இந்தியா திரைப்படமாக உருவாக உள்ளது.‌ இதுவரைக்கும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் லுக் டெஸ்ட் சென்னையில் நடைபெற்றது. அதில், எடுக்கப்பட்ட சிம்புவின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor simbu new look photos viral in social medias


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->