ஹாரி புரூக்கிற்கு ஐ.பி.எல். தொடரில் விளையாட 02 ஆண்டுகள் தடை விதித்துள்ள பி.சி.சி.ஐ...!
Harry Brook has been banned from playing in the IPL for 02 years by the BCCI
இந்தியாவில் நட்ஸைபெறவுள்ள உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல் போட்டியின் , 18-வது சீசன் எதிர்வரும் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணி மோதவுள்ளது.
இந்த ஐபில் தொடரில் டெல்லி அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் வரும் 24-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இந்த தொடருக்காக கடந்த நவம்பர் மாதம் நடந்த மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சார்பாக ரூ.6¼ கோடிக்கு இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் வாங்கப்பட்டார்.

ஆனால், அவர் திடீரென இந்த சீசனுக்கான ஐ.பி.எல். போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் விலகியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், இந்த முடிவை எடுத்ததாக அவர் விளக்கமளித்தார். ஆனால்,அவருக்கு ஐ.பி.எல். தொடரில் விளையாட பி.சி.சி.ஐ. 02 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
அதாவது, ஐ.பி.எல். புதிய விதிப்படி ஒரு வீரர் அத்தியாவசிய காரணமின்றி விலகினால் 02 ஆண்டு தடை விதிக்கப்படும் என்ற ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்திருந்தது. இதன் காரணமாக அவருக்கு ஐ.பி.எல். போட்டியில் விளையாட 02 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Harry Brook has been banned from playing in the IPL for 02 years by the BCCI