கமல் படத்திற்கு ஆப்பு.! சிம்புவை விடாத தலைவலி.! மீண்டும் ஆஸ்தான தயாரிப்பாளருடன் சர்ச்சை.! - Seithipunal
Seithipunal


அடிக்கடி சினிமாவை விட்டு சிம்பு காணாமல் போனாலும் அவரது திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது அவரது மார்க்கெட் குறையாமல் பார்த்துக் கொள்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் மாநாடு திரைப்படத்தின் மூலம் சிம்பு கம் பேக் கொடுத்தார். 

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் திரைப்படத்தை தயாரித்து பல கோடி நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்புவின் மாநாடு திரைப்பட வெளியீட்டின் போது பட வெளியீட்டுக்கு தடை போட்டார். அப்போது தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தான் சிம்புவுக்கு கை கொடுத்து உதவினார். 

இதற்கு உதவி செய்ய தனது தயாரிப்பில் மூன்று படங்களை நடிக்க வேண்டும் என்று ஐசரி கணேஷ் கண்டிஷன் போட்டுள்ளார். மாநாடு படத்திற்குப் பின் ஐசரி கணேஷ் தயாரிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்பு நடித்தார். ஆனால், அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. மீதம் இரண்டு படங்களை ஐசரி கணேசுக்கு நடித்துக் கொடுக்காமல் தற்போது அவர் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார். 

இது ஐசரி கணேசுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்னிடம் இதற்காக அனுமதி கூட வாங்காமல் சிம்பு இந்த முடிவெடுத்தது அவரை மிகுந்த கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. கமல் அவருக்கு மிகவும் வேண்டியவர் என்றாலும் கூட அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி ஐசரி கணேசன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. என்னதான் சர்ச்சைகளை விட்டு சிம்பு நீங்க முயற்சித்தாலும் அவரை சர்ச்சைகள் விடுவதாக இல்லை என்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Simbu problem with producer isari Ganesh


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->