நடிகர் தம்பி ராமையாவின் மகனை கரம்பிடிக்கும், நடிகர் அர்ஜூனின் மகள்! - Seithipunal
Seithipunal


ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படும் நடிகர் அர்ஜுனின் மகளுக்கும், காமெடி மற்றும் குணசித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகனுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் அர்ஜுனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் விஷாலுக்கு ஜோடியாக பட்டத்து யானை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தார். 

தொடர்ந்து சொல்லிவிடவா என்ற படத்திலும், கன்னட படம் ஒன்றிலும் அவர் நடித்த அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் தமிழில் தண்ணி வண்டி, மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

தொடர்ந்து நடிகர் அர்ஜுன் தான் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உமாபதி கலந்து கொண்டார். 

இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் அர்ஜுன் குடும்பத்துடன் தம்பி ராமையா குடுத்திற்கு நட்பு ஏற்பட்டு உள்ளது. அதுமுதல் உமாபதி, ஐஸ்வர்யா இருவரும் காதலிக்கத் தொடங்கியதாகவும் சொல்லப்படுகிறது. 

இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சை கொடி காட்டியதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பும் விளக்கம் எதுவும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Umapathy Ramaiah Actress Aishwarya Arjun love marriage info


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->