அடுத்தடுத்து சோகம் - நடிகர் வடிவேலுவின் சகோதரர் காலமானார்.! - Seithipunal
Seithipunal


அடுத்தடுத்து சோகம் - நடிகர் வடிவேலுவின் சகோதரர் காலமானார்.!

தமிழ் சினிமாவின் பிரபல மற்றும் முன்னணி நடிகர்களில் ஒருவரான வடிவேலுவின் உடன் பிறந்த சகோதர்  ஜெகதீஸ்வரன். 55 வயதுடைய இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லீரல் செயலிழப்பு காரணமாக மதுரை ஐராவதநல்லூரில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், ஜெகதீஸ்வரன் இன்று தனது இல்லத்தில் காலமானார். இந்த மறைவுச் செய்தி திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வடிவேலுவின் சகோதரரான ஜெகதீஸ்வரன் மறைவுக்கு அனைவரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இவரும் தமிழ் சினிமாவில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அதில் ஒன்று நடிகர் சிம்பு கதாநாயகனாக அறிமுகமான ’காதல் அழிவதில்லை’ திரைப்படம். அதன் பின்னர் அவர் ஒரு பெட்டியில், சொத்து பிரச்சனை காரணமாகவும், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையாலும் சினிமாவில் பயணத்தை தொடர முடியவில்லை.

இப்போது ஜவுளிக்கடை வைத்து தொழில் நடத்தி வருகிறேன்.தெரிவித்திருந்தார். இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே வடிவேலுவின் தாயார் சரோஜினி வயது முதிர்வு காரணமாக காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vadivelu brother jegatheesan passed away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->