மாரி செல்வராஜூக்கு ஆதரவாக பேசிய வடிவேலு!  - Seithipunal
Seithipunal


மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் இவரது சொந்த ஊரில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டும் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தும் வருகிறார். 

அது போல் திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட சென்றபோது இயக்குனர் மாறி செல்வராஜ் உடன் சென்றிருந்தார். 

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் மாரிசெல்வராஜிக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு கருத்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக நடிகர் வடிவேலு, 'அவருடைய ஊர். அந்த ஊரில் மேடு, பள்ளம் எங்கு உள்ளது என அவருக்குதான் நன்றாக தெரியும். அவர் ஊரில் அவர் போகாமல் வேறு யார் போவது. அவர் என்ன அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறாரா' என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor Vadivelu supports Mariselvaraj


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->