கலாச்சாரம் என்ற பெயரில் குற்றம்.. கல்லூரி நிகழ்ச்சியில் ஓவியா கணீர் பேச்சு.!
actress oviya speech in college function
சமீபகாலமாக நடிகை ஓவியா தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதற்கு காரணம் அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் நிகழ்ச்சிகளில் பங்கேற்க பெரிய தொகையை சம்பளமாக பெற்றுக் கொள்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.
ட்விட்டர் மூலமாக அவ்வப்போது ஏதாவது கருத்துக்களை வெளியிட்டு ஓவியா சர்ச்சையை ஏற்படுத்துவார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அவருக்கு நிறைய ஆதரவு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் ஓவியா பங்கேற்று பேசிய போது, "கலாச்சாரம் என்ற பெயரில் எதையும் மறைக்காமல் அனைத்தையும் வெளிப்படையாக பேசுவது தான் என்னுடைய வழக்கம். அப்போது தான் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
பெண் பிள்ளைகளிடம் ஆண் பிள்ளைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பெற்றோர் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். சிறுவயதில் இருந்தே பெண்களை மதிக்க கற்றுக் கொடுத்து வளர்த்தால், எந்தவிதமான குற்ற செயல்களையும் ஆண்பிள்ளைகள் செய்ய மாட்டார்கள்." என்று கூறியுள்ளார்.
நடிகை ஓவியா கலாச்சாரம் என்ற பெயரில் அனைத்தையும் ஒளித்து மறைத்து குற்றங்களுக்கு காரணிகளை ஏற்படுத்துவதாக கூறியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
actress oviya speech in college function