சார்தார் ஷூட்டிங்கில் பிறந்த நாள் கொண்டாட்டம்.! வைரலாகும் ரஜிஷா விஜய் பர்த்டே வீடீயோ.! - Seithipunal
Seithipunal


கார்த்தி நடிப்பில் உருவாகும் திரைப்படம் தான் சர்தார். பிஎஸ் மித்ரன் இயக்கிவருகின்ற இந்த திரைப்படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து வருகின்றார். கார்த்தியின் சர்தார் திரைப்படம் முதலில் திரையரங்குகளில் வெளியாகி பின் ஓடிடியில் வெளியாக இருக்கின்றது. 

இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமையை ஆஹா தமிழ் ஓடிடி நிறுவனம்  கைப்பற்றி இருக்கின்றது. இது, தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றது. தெலுங்கு படங்கள் மற்றும் தெலுங்கு தொடர்களை வெளியிட்டு வந்தனர். 

சமீபத்தில்தான் இந்த ஓடிடி தமிழுக்காகவும் விரிவாக்கம் செய்யப்பட்டது. சர்தார் படத்தின் ஓடிடி உரிமை இந்த நிறுவனம், மிகப் பெரும் தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.இந்த சர்தார் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். 

ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் இருவரும் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு கார்த்தியின் பொன்னியின் செல்வன், விருமன் ஆகிய படங்களின் ரிலிஸுக்கு பின் சர்தார் வெளியாகின்றது.

 கார்த்தியின் சர்தார் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இத்தகைய நிலையில், நடிகை ரஜிஷா விஜயனின் பிறந்த நாளுக்கு படக்குழு கேக் வெட்டிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress rajisha vijayan birthday special


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->