அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில் களமிறங்கும் அர்ஜுன்.! - Seithipunal
Seithipunal


அஜித்தின் துணிவு படத்தைத் தொடர்ந்து தற்போது புதிய படத்தை யார் இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே இருந்து வருகிறது. அந்த எதிர்பார்ப்புக்கு கடந்த மே 1 ஆம் தேதி அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியது.

அதன் அடிப்படையில், இயக்குநர் மகிழ் திருமேனி அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த படத்துக்கு 'விடாமுயற்சி' எனவும் தலைப்பு வைத்துள்ளனர். 

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கும் நிலையில், லைகா நிறுவனம் தயாரிக்கிறது. நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

முன்னதாக, புணேவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், நடிகை த்ரிஷா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. 

ஆனால், படப்பிடிப்பு சில காரணங்களால் ஒத்திவைப்பதை தொடர்ந்து, ஆகஸ்ட் மாத துவக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் தெரிய வந்தது. 

ஐரோப்பாவில் அஜித் மீண்டும் தன் இருசக்கர வாகனப் பயணத்தைத் துவங்கியுள்ளதால், விடாமுயற்சி படப்பிடிப்பு என்ன ஆனது என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, அஜித்துடன் மங்காத்தா படத்தில் அர்ஜுன் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arjun in Ajith film


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->