டொனால்டு டிரம்ப்,பதவியேற்பு விழா..ரூ.8½ கோடி நன்கொடை வழங்கும் கூகுள் நிறுவனம்!
Donald Trumps inauguration Google to donate Rs 8.5 crore
வருகிற 20-ந் தேதி அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளநிலையில் அந்த பதவியேற்பு விழாவுக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலரைநன்கொடையாக வழங்கியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்டு டிரம்ப், அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றிப் பெற்றார்.இதில் கமலாகரிஸ் படுதோல்வியை சந்தித்தார்,இதனால் தற்போது உள்ள அதிபர் ஜோ பைடன் பதவியை இழக்கஉள்ளார்.
இந்தநிலையில் வருகிற 20-ந் தேதி அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார். மேலும் டிரம்பின் பதவியேற்பு விழா அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. டிரம்பின் இந்த பதவியேற்பு விழாவில் உலகின் பல்வேறு நாட்டு தலைவர்களும் கலந்துகொள்ள உள்ளதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகின்றன.
இந்த நிலையில் டிரம்பின் பதவியேற்பு விழாவுக்கான நிதியை அமெரிக்க நிறுவனங்கள் வாரி வழங்கி வருகின்றன. அந்த வகையில் கூகுள் நிறுவனம் டிரம்பின் பதவியேற்பு விழாவுக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.8 கோடியே 58 லட்சம்) நன்கொடையாக வழங்கியுள்ளது.இதே போல உலக புகழ் பெற்ற விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனமும் 1 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Donald Trumps inauguration Google to donate Rs 8.5 crore