அடுத்தப்படமும் இப்படித்தான் - அதிரடியாக அறிவித்த அயலான் பட இயக்குனர்.! - Seithipunal
Seithipunal


ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரமாண்டமாக உருவான படம் அயலான். இந்தப் படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி உள்ள நிலையில் படம் குறித்து மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் கருத்துகளை அறிந்து கொள்ள அயலான் திரைப்படத்தின் இயக்குநர் ரவிகுமார் திருப்பூரில் உள்ள பிரபல திரையங்கிற்கு நேற்று வருகை தந்து, அங்கு ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து, படம் குறித்த கருத்துகளை கேட்டறிந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரவிகுமார், "எனது இயக்கத்தில் வெளிவந்துள்ள 'அயலான்' படத்தின் கருத்துக்களை கேட்பதற்காக இன்று எனது சொந்த ஊரான திருப்பூரில் உள்ள திரையரங்கிற்கு வந்துள்ளேன். இங்கு மக்கள் அளித்த வரவேற்பு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. 'அயலான்' படம் நன்றாக இருப்பதாகவும் புதுவிதமான உணர்வை தூண்டி இருப்பதாகவும், தங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து இருப்பதாகவும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

'அயலான்' படம் திரைக்கு வருவதற்கு பல்வேறு கட்ட போராட்டங்களை சந்தித்து ஆறு ஆண்டுகள் கழித்து திரைக்கு வந்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக உழைத்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். படம் குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. 

என்னைப் பொறுத்தவரை விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு எது சரியில்லையோ அதனை அடுத்த படத்தில் திருத்திக்கொள்ள முயற்சி செய்வேன். தமிழ் திரையுலகில் சயின்ஸ் பிக்சன் மாதிரியான படங்களை இயக்குவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எனது அடுத்த படைப்புகளிலும் சயின்ஸ் பிக்சன் தொடர்பான புதிய முயற்சிகளை படமாக இயக்க திட்டமிட்டுள்ளேன். வரும் காலங்களில் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். சிவகார்த்திகேயன் மட்டுமின்றி அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ளது. வரும் காலங்களில் அது நிறைவேறும் என நினைக்கிறேன்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ayalan movie director press meet in tirupur theater


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->