ஜெய் நடித்துள்ள 'பேபி & பேபி' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது..! - Seithipunal
Seithipunal


நடிகர் ஜெய் நடித்துள்ள திரைப்படம் 'பேபி& பேபி' திரைப்படத்தில் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை பிரதாப் இயக்கியுள்ளார்.

டி.இமான் இசையமைத்துள்ளார். டி.பி.சாரதி எஸ்.ஐ.சி.ஏ, ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.ஆனந்தலிங்ககுமார் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தில் ஜெய்யுடன், யோகி பாபு, சத்யராஜ், கீர்த்தனா, சாய் தன்யா, பிரக்யா நக்ரா, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தங்கதுரை, ராமர், ராஜேந்திரன், சேஷு, பிரத்தோஷ் மற்றும் பலர் என நகைச்சுவை நடிகர்களின் பட்டாளமே நடித்துள்ளனர்.

'பேபி& பேபி' படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இன்று வெளியான டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=cOmAdULrI2Y&t=1s


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The trailer of Jais Baby & Baby has been released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->