#Biggboss 6 : இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்.!
Dhanalakshmi Evicted
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதனால், தான் பிக் பாஸ் சீசன் 5 முடிந்து, 6வது சீசன் வரை வந்துள்ளது. 6 வது சீசன் வரும் அக்டோபர் 9ம் தேதி தொடங்கியது.
20 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே நிறைய சண்டை சச்சரவுகள் இருந்து வருகின்றன. இதில் 21ஆவது போட்டியாளராக மைனா நந்தினி உள்ளே நுழைந்தார். இதன் பின்னர் பிக் பாஸ் வீட்டில் அனைவருக்கும் பிடித்த நபராக இருந்த ஜி.பி.முத்து தானாகவே வெளியேறினார்.
அதைத் தொடர்ந்து சாந்தி, அசல் கோளார், ஷெரீனா, VJ மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சீ, ஆயீஷா, ஜனனி உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய பல வாரங்கள் கடந்த நிலையில் இன்னும் வைல்ட் கார்டு என்ட்ரியாக புதியவர்கள் யாரும் நுழையவில்லை. இந்த நிலையில், இந்த வார எலிமினேஷனில் பிக்பாஸ் வீட்டிலிருப்து தனலக்ஷ்மி வெளியேறியுள்ளார்.