டிஜிபி சங்கர் ஜிவால் மகள் நடிகையாக அறிமுகமாகும்.. ரவி மோகன் படத்தில் இணைத்தார்!
DGP Shankar Jiwals daughter to debut as an actress Ravi Mohan joins the film
நடிகர் ரவி மோகன் தற்போது நடித்து வரும் 'கராத்தே பாபு' படத்தில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் தவ்தி ஜிவால் நடிகையாக அறிமுகமாக உள்ளார்.
கடந்த 2003-ம் ஆண்டு தன்னுடைய சகோதரர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் தமிழ் திரையுலகில் ரவி , முக்கிய நடிகராக இருந்துவரும் ரவிமற்றும் சதா இருவரும் லீட் ரோல்களில் நடித்திருந்த இத்திரைப்படம் ஹிட் திரைப்படமாக மாறிய நிலையில், ரவியின் பெயர் முதல் வெற்றிபடமான ஜெயம் என்பதுடன் இணைந்து ஜெயம் ரவி என கூறப்பட்டது.
இதையடுத்து எம் குமரன், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், பேராண்மை, தனி ஒருவன் தொடங்கி பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து வெற்றி நாயகனாக வலம்வரும் ரவி, சமீபத்தில் தன்னுடைய பெயரை ’ஜெயம் ரவி’ என்பதிலிருந்து ’ரவி மோகன்’ என்று மாற்றியிருப்பதாகவும், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ’ரவி அல்லது ரவி மோகன்’ என்றே அழைக்குமாறும் அறிவித்திருந்தார்.
இப்படி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன்.தற்பொழுது ஜீனி திரைப்படத்தில் நடித்துள்ளார்.இதையடுத்து ரவி மோகனின் 34-வது படத்திற்கு தற்காலிகமாக 'ஆர்.எம் 34' எனப்பெயரிடப்பட்டிருக்கிறது என்றும் இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில் 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்குகிறார் என்றும் சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்றும் சக்தி, காயத்ரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சமீபத்தில், 'ஆர்.எம் 34' படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. அப்போது இப்படத்திற்கு 'கராத்தே பாபு' எனப்பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் இப்படத்தின் மூலம் தவ்தி ஜிவால் நடிகையாக அறிமுகமாக உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
DGP Shankar Jiwals daughter to debut as an actress Ravi Mohan joins the film