தனுஷுடன் மோதும் சிவகார்த்திகேயன்! சரவெடி தெறிக்க போகுது!  - Seithipunal
Seithipunal



கடந்த 2016 இல் இயக்குனர் ரவிக்குமார் சிவகார்த்திகேயனை வைத்து அயலான் என்ற படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியாகியது.

இந்த படத்தில் கதாநாயகியாக ரகுல் பீர்த் சிங் நடிக்கிறார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என படக் குழுவினர்களால் 2018ல் தெரிவிக்கப்பட்டது.

பார்ப்பவர்கள் வியக்கும் வகையில் பிரம்மாண்டமாக படப்பிடப்பு தொடங்கியது. படப்பிடிப்பு வேலைகள் முடிவு பெற்ற நிலையிலும் காரணம்  எதுவும் சொல்லப்படாமல் படத்தின் வெளியீடு மட்டும் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இது ஒரு ஏலியன் சம்பந்தப்பட்ட திரைக்கதை என்பதால் கிராபிக்ஸ் வேலைகள் அதிகமாக உள்ளது என பட குழுவினரால் பின்னர் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், படத்தின்  கிராபிக்ஸ் வேலைகள் முழுமையாக முடிவடைந்து விட்டதாகவும் இந்த இந்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதே சமயத்தில், தனுஷின் கேப்டன் மில்லர், கார்த்தியின் ஜப்பான், ஆகிய படங்கள் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. 

ஒருவேளை சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியானால் இந்த படங்களுடன் திரையில் மோதும் என ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகமாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanush and SK movie in Diwali 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->