விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவராக களமிறங்கும் பிரபல நடிகர்!. ரசிகர்கள் வரவேற்பு!.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவராக களமிறங்கும் பிரபல நடிகர்!. ரசிகர்கள் வரவேற்பு!.
தமிழ் சினிமாவில் சமீப காலமாக தலைவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படுகின்றன. முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படங்களாக எடுக்கப்பட முயற்சிகள் நடக்கின்றன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மட்டும் 3 இயக்குனர்கள் கொண்டு படமெடுக்க திட்டமிட்டு பணிகளை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் தலைவர்கள் வரிசையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையும் படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தினை ஸ்டூடியோ 18 என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
![](https://img.seithipunal.com/media/baobu.jpg)
இந்த படத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனாக நடிகர் பாபிசிம்ஹா நடிக்க இருக்கிறார்.
நடிகர் பாபிசிம்ஹா ஜிகர்தண்டா படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர். சீறும் புலிகள் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த ஜி.வெங்கடேஷ் குமார் இயக்குகிறார்.
English Summary
famous actor acting as prabakaran