தனது 60 ஆவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடும் பிரபல இயக்குனர்! வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்!
Famous director Shankar today celebrates 60th birthday
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவர் 90களில் இருந்து தற்போது வரை ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார்.
இவரின் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு இடத்தில் பிரம்மாண்டத்தை இணைத்திருப்பார். இவரது முதல் படம் 'ஜென்டில்மேன்'.
இந்த படத்திலேயே 2d அனிமேஷன் போன்றவற்றை பயன்படுத்தி தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி கொண்டார்.
இவர் தொடர்ந்து ரஜினி, கமல், விஜய் என பல நடிகர்களுடன் பணிபுரிந்து பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். தற்போது இயக்குனர் சங்கர் கமல் நடிப்பில் 'இந்தியன் 2' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
27 வருடங்களுக்குப் பிறகு தயாரிக்கப்படும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் ப்ரீத்தி சிங், ப்ரியா பவானி சங்கர் என பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்தத் திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றது. அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று ஷங்கரின் 60 ஆவது பிறந்தநாளை ஒட்டி திரையுலக பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் சங்கர் 'இந்தியன் 2' பட குழுவினருடன் இணைந்து பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
English Summary
Famous director Shankar today celebrates 60th birthday