சட்டமன்ற மரபுகளை மதிக்காமல் செயல்படுவதா..? சட்டப்பேரவை தலைவருக்கு அதிமுக கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


சட்டப்பேரவை தலைவர் செல்வம், சட்டமன்ற சட்டங்கள் மற்றும் மரபுகள் எதையும் மதிக்காமல் தொடர்ந்து செயலாற்றி வருவது அவர் வகிக்கும் சட்டப்பேரவை தலைவர் பதவிக்க அழகல்ல என்று புதுச்சேரி மாநில அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் பேசியதாவது :அரசியல் அமைப்பு சட்டம் சட்டப்பேரவை நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகள் படி சட்டப்பேரவை தலைவருக்கு சட்டமன்றத்தில் பல்வேறு குழுக்களை அமைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுக்கணக்கு குழு, மதிப்பீட்டுக்குழு, அரசாங்க உறுதிமொழி குழு, மனுக்கள் பற்றிய குழு, உள்ளிட்ட பல்வேறு குழுக்களை அமைக்கவும், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கவும், சபாநாயகர் பொறுப்பாவார்.

புதுச்சேரி அரசின் வரவு, செலவினங்களை ஆய்வு செய்யும் மத்திய தணிக்கை குழுவின் அறிக்கை மீது சரிவர கணக்குகளை சமர்ப்பிக்காத அரசு துறைகளுக்கு விளக்கம் கேட்டு ஏனாம் பகுதியில் பொது கணக்கு குழு மற்றும் மதிப்பீட்டு குழுக்களின் தணிக்கை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இவ்விரு குழுக்களிலும் உறுப்பினராக இல்லாத மாண்புமிகு சபாநாயகர் அவர்கள் சட்டத்தையும், மரபுகளையும் மீறி தனது தலைமையில் தணிக்கை குழு கூட்டத்தை நடத்தவது என்பது பாராளுமன்ற ஜனநாயகத்தை அவமதிக்கும் செயலாகும். மேலும் பொது கணக்கு குழு, மதிப்பீட்டு குழு ஆகிய இவ்விரு குழுக்களின் தலைவர்களின் முக்கியத்துவத்தை குறைத்து தானே முழு அதிகாரத்தையும் கையில் எடுப்பது என்பது சட்டமன்ற நடத்தை விதிகளுக்கு புறம்பான ஒன்றாகும்.

இவ்விரண்டு குழுக்களின் சுதந்திரமான செயல்களை ஆட்சி அதிகாரத்தில் உள்ள சட்டப்பேரவை தலைவர் பறிப்பது தவறான ஒன்றாகும். இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் உள்ள சபாநாயகர்களும், பாராளுமன்ற சபாநாயகரும் செய்யாது ஒரு செயலை நம்முடைய சட்டப்பேரவை தலைவர் செய்வதை அரசு வேடிக்கை பார்ப்பது ஜனநாயகத்தை எதிர்காலத்தில் சீர்குலைக்கும் முன்னுதரானமாக அமைகிறது. யுனியன் பிரதேச சட்டப்பேரவை தலைவர் இதுபோன்ற அத்துமீறிய செயலை துணைநிலை ஆளுநர் அவர்கள் தடுத்து நிறுத்தாது வியப்பாக உள்ளது.

பொதுவாக மத்திய தணிக்கை குழுவின் அறிக்கை மீது முறையான விசாரணை நடைபெற்று அதில் தவறு இருப்பின் அது சம்பந்தமான அறிக்கையை சம்பந்தப்பட்ட குழு சட்டப்பேரவையில் வைக்கும். அதற்கு பிறகு அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை மட்டுமே சபாநாயகருக்கு உண்டு. ஆனால் தணிக்கை கூட்டத்தையே தலைமை ஏற்று நடத்தும் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவரின் செயல்பாட்டை சம்பந்தப்பட்ட குழுக்களின் தலைவர்களே வாய்முடி மவுனம் காப்பது ஏன்.

அதிலும் குறிப்பாக பொதுக்கணக்கு குழுவின் தலைவரும், திமுகவை சேர்ந்த மதிப்பீட்டு குழு தலைவரும், பாஜகவை சேர்ந்த மாண்பு சட்டப்பேரவை தலைவரின் இந்த அத்துமீறிய செயலுக்கு துணை போவது என்பது திமுகவுக்கம், பாஜகவுக்கும் உள்ள ரகசிய உறவின் வெளிப்பாடாகும்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதலமைச்சர்  நாராயணசாமி  பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போது அதிமுக குறித்து அநாகரீகமாக பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். கடந்த காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியின் முதலமைச்சராக இருந்து சட்டமன்ற தேர்தலையே சந்திக்காமல் ஆட்சியை பறிகொடுத்த திரு.நாராயணசாமி அவர்கள் தான் என்ன பேசுகிறோம் என்பது கூட தெரியாமல் மூளை குழம்பிய மன நோயாளி போன்று பேசுகிறார். தனது கட்சியில் வெளிநாட்டு போதை பொருள் கடத்துபவர்களையும், கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களையும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களையும் அருகில் வைத்துக்கொண்டு அவர்கள் மூலம் ஆதாயம் தேடிக்கொண்டிருக்கும் நாராயணசாமிக்கு நாவடக்கம் தேவை.

பொதுவாக எதற்கும் உபயோகம் இல்லாத மிகுந்த வயதானவர்களை ஒருசிலர் ஒரு குடும்பத்தில் இருந்து கல் நெஞ்சத்தோடு விளக்கி வைப்பர். அது போன்று அரசியலுக்கு உபயோகம் இல்லாத நாராயணசாமி அவர்களை அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியின் தலைமை முற்றிலுமாக விளக்கி ஒதுக்கி வைத்துள்ளது ஏன் என்பதை உணர்ந்த மற்றவர்களை பற்றி பேசும் போது நாவடக்கத்துடன் பேச வேண்டும்  என்று புதுச்சேரி மாநில அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Acting without respect for legislative conventions AIADMK slams Assembly Speaker


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->