முகத்தில் தழும்புகளுடன்... ஆளே மாறிப்போன விஜய் ஆண்டனி.! ரசிகர்கள் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளராக இருப்பவர் விஜய் ஆண்டனி. நான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சலீம்  பிச்சைக்காரன் ஆகிய திரைப்படங்களில் வெற்றியால் முக்கிய கதாநாயகனாக உயர்ந்தார்.

பிச்சைக்காரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்க முடிவு செய்தார். இதற்கான படப்பிடிப்புகள் துவங்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் படத்தின் சில சண்டை காட்சிகள் மலேசியாவில் வைத்து படமாக்கப்பட்ட போது அவர் ஓட்டி வந்த ஸ்பீட் போட் விபத்திற்கு உள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த விஜய் ஆண்டனியை படக்குழுவினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மூக்கு தாடை போன்ற பகுதிகளில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. தற்போது அறுவை சிகிச்சைகள் முடிந்து  நலமுடன் திரும்பி வந்திருக்கிறார்.

சமீபத்தில் பிச்சைக்காரன் 2 திரைப்படத்திலிருந்து முதல் பாடலாக பிக்காளி என்றபாடல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார் விஜய் ஆண்டனி. விபத்து ஏற்பட்டதில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ததினால் அவரது முகமே மாறி இருக்கிறது. விபத்திற்கு பின்பானா அவரது புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில்  வைரலாகி  இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fans are shocked by Vijay Antony new photo which has changed beyond recognition


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->