மாமன்னன் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
fifty two crores collection of mamannan movie
மாமன்னன் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகரும் தற்போதைய அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன்.
இந்தத் திரைப்படம் கடந்த மாதம் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் உதயநிதி ஸ்டாலினின் கடைசிப் படம் என்பதால் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு பெற்றிருந்தது.
இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்களே வந்தாலும் மாமன்னன் வசூலில் குறைவைக்கவில்லை. படம் வெளியான முதல்நாளில் இருந்து தமிழகத்தில் மட்டும் ரூ.9 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற மாமன்னன் படத்தின் நன்றி தெரிக்கும் விழாவில் நடிகர் உதயநிதி பேசியதாவது, "மாமன்னன் திரைப்படம் வெளியாகி ஒன்பது நாட்களில் ரூ.52 கோடி வசூல் செய்துள்ளது.
இந்தப் படத்தின் உண்மையான மாமன்னன் வடிவேலு தான். இந்தப் படத்தில் வடிவேலு நடிக்க ஒத்துக்கலனா இந்த படமே வேண்டாம். வேற படம் ஏதாவது பண்ணலாம்னு நான் மாரி செல்வராஜ் கிட்ட சொன்னேன். ஒரு நல்ல படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி" என்று அவர் தெரிவித்தார்.
English Summary
fifty two crores collection of mamannan movie