'கேம் சேஞ்சர்' படத்தின் ரிலீஸ் அப்டேட்!
Game Changer Movie Release Update
சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. இந்த திரைப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
இயக்குனர் சங்கர் 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து ராம்சரண் திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் சண்டைக்காட்சியில் ஆயிரம் ஸ்டாண்ட் கலைஞர்கள் பங்குபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியது.
தமிழ் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஷங்கருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
அதாவது இந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படம் 2024 ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாக்கியது.
இந்நிலையில் தயாரிப்பாளர் ராஜு இந்த திரைப்படம் 2024 செப்டம்பர் மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
English Summary
Game Changer Movie Release Update