''கில்லி'' திரைப்பட பேனர் கிழிப்பு: போலீசார் அதிரடி நடவடிக்கை... மன்னிப்பு கேட்ட அஜித் ரசிகர்!  - Seithipunal
Seithipunal


சமீபகாலமாக திரையரங்குகளில் பிரபல நடிகர்களின் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. அந்த வகையில் நடிகர் விஜய், திரிஷா நடிப்பில் கலந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ''கில்லி'' திரைப்படம் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. 

இதனை அடுத்து 23 ஆண்டுகளுக்கு பிறகு ''தீனா'' படம் டிஜிட்டல் முறையில் அஜித்குமார் பிறந்த நாளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை, காசி தியேட்டரில் தீனா படத்தின் ரீ ரிலீஸ் பேனர் வைத்து அஜித் ரசிகர்கள் கொண்டாடினர். 

அதில் ஒருவர் அதே தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த கில்லி திரைப்படம் பேனரை கிழித்துள்ளார் .இத்தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ரசிகரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே தியேட்டரில் பேனரை கிழித்தவர் மன்னிப்பு கேட்கும் வீடியோவை தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில், காசி திரையரங்கத்தில் தீனா திரைப்படத்தை பார்க்க சென்றிருந்தேன். உற்சாகத்தில் நண்பர்களுடன் இருந்த பொழுது உணர்ச்சிவசப்பட்டு எனது வண்டி சாவியை கொண்டு கில்லி பட பேனரை கிழித்து விட்டேன். 

அதற்கு நான் அண்ணன் விஜய் அவர்களிடமும் தமிழக வெற்றிக் கழக நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது போன்ற சம்பவங்களில் இனிமேல் ஈடுபட மாட்டேன். தலை வணங்கி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என பேசி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gilli banner torn police attention Ajith fan apologized


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->