விஜய் தேவர் கொண்டா படத்தில் இணையும் பிரபல நடிகை.! - Seithipunal
Seithipunal


தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருக்கும் இவருடைய புதிய படங்களின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் விஜய் தேவர்கொண்டா மீண்டும் தில் ராஜூ தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை ரவி கிரண் கோலா இயக்குகிறார். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து சாய் பல்லவியிடம் படக்குழு பேசிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் உண்மையாக இருந்தால் விஜய் தேவரகொண்டா மற்றும் சாய் பல்லவி கூட்டணியில் உருவாகும் முதல் படமாக இது அமையும். இதனால், இருவரது ரசிகர்களும் அவர்களை திரையில் பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sai pallavi work with vijay devarkonda


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->