இந்தியா கூட்டணியில் பிரதமர் பதவிக்கு ஆளில்லை - அமித்ஷா!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள 7 கட்டங்களில் 4 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகியுள்ளது. மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், மத்திய அமைச்சர் பீகார் மாநிலம் மதுவாதி நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார். 

 மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமித்ஷா பேசுகையில், இந்தியா கூட்டணி ஆண்டுக்கு ஒருவர் என சுழற்சி முறையில் பதவியை பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளது. நாட்டுக்கு ஒரு பிரதமர் தேவை.ஆண்டுக்கு ஒரு பிரதமர் தேவையில்லை. பிரதமர் மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக நாடு முடிவு செய்துள்ளது. இந்தியா கூட்டணி பிரதமர் பதவிக்கு ஆள்யில்லை என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indialliance pm posting no one by AmithShah


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->