திடீரென அபுதாபி புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


 

ஞானவேல் இடத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவரது 170 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியார், துஷாரா விஜயம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டு திருவனந்தபுரம், திருநெல்வேலி, மும்பை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. 

இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்திலிருந்து நடிகர் ரஜினிகாந்த் அபுதாபி செல்லும் விமானத்தில் புறப்பட்ட சென்றார். 

ஒரு வாரம் அபுதாபியில் தங்கி ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்தை கண்ட ரசிகர்கள் உற்சாகத்துடன் முழக்கமிட்டனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor Rajinikanth left Abu Dhabi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->