"ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும்! - Seithipunal
Seithipunal


ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பொதுநல மனு தாக்கல் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர், சிந்தாமணிப்பட்டியில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பெரியசாமி என்பவர் அனுமதி கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி காவல் நிலையத்தில் மனு அளித்தால் போதும், அதை விடுத்து, மனு தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை, ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த மனு தாக்கல் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோயில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு மனு அளிக்கப்பட்டால் 7 தினங்களுக்குள் காவல்துறையினர் பதிலளிக்க வேண்டும், இல்லையென்றால் அனுமதி அளிக்கப்பட்டதாக கருதி விழாக்குழுவினர் நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம் என காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு ஒன்றை ஏற்கனவே வெளியிட்டிருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy fines will be imposed for seeking permission for dancing programs


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->