நிர்வாண வீடியோக்களை வைத்து மிரட்டல்!...பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது நடிகை பாலியல் புகார்!
Intimidation with nude videos Actress sexual complaint against famous YouTuber Harsha Sai
தெலுங்கானாவின் பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய், ஏழை மக்களுக்கு பண உதவி மற்றும் பொருட்கள் உதவி செய்வதை வீடியோவாக எடுத்து யூடியூப் மற்றும் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். இவரது யூடியூப் சேனலை 1 கோடிக்கும் அதிகமானோர் சப்ஸ்க்ரைப் செய்துள்ள நிலையில், ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஒருவர் அளித்துள்ள புகாரில், ஹர்ஷா சாய் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், நிர்வாண படங்கள், வீடியோக்களை வைத்து பணம் கேட்டு மிரட்டுவதாக நடிகை ஒருவர் ஹர்ஷா சாய் மீது புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில், ஹர்ஷா சாய் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து நான் சட்ட ரீதியில் சந்திக்கப்போவதாக ஹர்ஷா சாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன் மீது பொய் புகார்களை சுமத்துவதாகவும், அதை சட்ட ரீதியில் சந்திக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
யூடியூபர் ஹர்ஷா சாய், ஏழை மக்களுக்கு பண உதவி மற்றும் பொருட்கள் உதவி செய்வதை வீடியோவாக எடுத்து யூடியூப் மற்றும் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வரும் நிலையில், இவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Intimidation with nude videos Actress sexual complaint against famous YouTuber Harsha Sai