"இந்தியன் - 2" பிரஸ் மீட்டில் விவேக், மனோ பாலா குறித்து கமலஹாசன் உருக்கம்..!
Kamalahasan Melting Speech About Vivek and Manobala in Indian 2 Movie Press Meet
ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள "இந்தியன் 2 " திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் ஷங்கர், கமலஹாசன், சித்தார்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கமலஹாசன் பேசியதாவது,
"இந்தியன்" படத்தின் முதல் பாகத்தின் போதே நான் இந்த படத்தின் 2ம் பாகம் எடுப்பது குறித்து இயக்குனர் ஷங்கரிடம் சொன்னேன். முதல் பாகத்தில் இந்தியன் தாத்தா ஊழலுக்கு எதிராக போராடினார். அரசியலில் ஊழல் புரையோடிப் போயிருப்பதால் தான் தற்போது இந்தியன் தாத்தா மீண்டும் இரண்டாம் முறையாக வருகை தரவுள்ளார். இரண்டாம் பாகத்திற்கான கருவை அரசியல் தான் எங்களுக்கு தந்துள்ளது.
படப்பிடிப்பில் விபத்து, கொரோனா போன்ற பல காரணங்களால் தான் இந்த படம் 5, 6 வருடங்களாக முடங்கி இருந்தது. அந்த தடைகளில் இருந்தெல்லாம் எங்களை மீட்டுக் கொண்டு வந்தது ரெட் ஜெயண்ட் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் தான். அவர்களுக்கு நாங்கள் மிகவும் நன்றிக் கடன் பட்டுள்ளோம்.
விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா ஆகியோர் இன்று நம்முடன் இல்லை. அவர்களும் இந்த விழாவில் பங்கேற்று இந்த மேடையில் அமர்ந்திருக்க வேண்டியவர்கள். ஆனால் காலம் எவ்வளவு கொடுமையானது என்று இப்போது உணர்கிறேன்.
இந்தியன் முதல் பாகம் எடுத்த போது இருந்தது போல் தான் ஷங்கர் இப்போதும் இருக்கிறார். இந்த படத்தில் உழைத்தவர்கள் எல்லோரும் பணத்திற்காக வேலை செய்யாமல் சந்தோஷமாக உழைத்தார்கள்" என்று கமலஹாசன் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.
English Summary
Kamalahasan Melting Speech About Vivek and Manobala in Indian 2 Movie Press Meet