'பேட் கேர்ள்' படத்திற்கு தடை விதிக்கவேண்டும்; பிராமணர் சங்கத்தின் தலைவர் வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


பேட் கேர்ள் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என, தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் தலைவர் நாராயணன் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; பேட் கேர்ள் படத்தின் டீசர் நேற்று முன்தினம் வெளியாகி உள்ளது. இதில், பிராமணர் சமுதாயத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இளம் தலைமுறை பெண்களை, மிகவும் கேவலமாக சித்தரித்திருப்பது வேதனை அளிக்கிறது.

பட தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்கள் உள்ளிட்ட படக்குழுவினர், மிகப்பெரிய நிலை தடுமாற்றத்திற்கு ஆளாகி, இளம் தலைமுறையினரை பெரும் கலாசார சீரழிவை நோக்கி எடுத்துச்செல்ல முற்பட்டுள்ளனர்.

இப்படத்தில் காட்டி உள்ள, இளம்தலைமுறையின் தவறான வாழ்க்கை முறையை, ஏதோ பெண்ணுரிமை போல காட்டியுள்ள, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் படக்குழுவினருக்கு, தமிழ்நாடு பிராமணர் சங்கம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

இப்படத்திற்கு, 'ஏ' சான்றிதழுடன் சென்சார் போர்டு அனுமதி வழங்கி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. மத்திய அரசின் மேற்பார்வையில் இயங்கும், 'சென்சார் போர்டு' அனுமதியை, மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும்.

அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை பெரும் சர்ச்சையாகி உள்ள இந்த தருணத்தில், பேட் கேர்ள் படத்திற்கு, தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The leader of the Brahmin Sangam insists that the film Bad Girl should be banned


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->