காந்தாரா படத்தின் வராக ரூபம் பாடலுக்கு தடை! - Seithipunal
Seithipunal


நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த கன்னட மொழி படமான காந்தாரா கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியானது. கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியிட பட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே ஹோம்பாலே பிலிம்ஸ் முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் இந்திய மொழிகளில் இத்திரைப்படம் வெளியானது.

காந்தாரா படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஹிட் பாடலான வராக ரூபம் கேரளாவைச் சேர்ந்த பிரபல இசை குழுவான தாய்க்குடம் பிரிட்ஜ்ஜி நவரசம் பாடலை காபி அடித்து உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து கேரளா மாநிலம் கோழிக்கோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தாய்க்குடம் பிரிட்ஜ்ஜிங் இசைக்குழுவின் அனுமதி இல்லாமல் வராக ரூபம் பாடலை திரையரங்குகளில் மற்றும் ஆன்லைன் ஸ்டீமில் ஒளிபரப்ப தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kantara movie Varaha Roopam song was banned


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->