பிரபல பாடகர் ஏசுதாஸ் மருத்துவமனையில் திடீர் அனுமதி.!
popular singer yesudas admitted hospital for health issue
கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி பகுதியை சேர்ந்தவர் பாடகர் கே.ஜே.யேசுதாஸ். தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார்.
எட்டு தேசிய விருதுகள் மட்டுமின்றி மத்திய அரசால் வழங்கப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறார். இந்த நிலையில், பாடகர் யேசுதாஸ் வயதுமூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். யேசுதாசுக்கு ரத்த அணுக்கள் தொடர்பான பிரச்சினைக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தற்போது நலமோடு இருப்பதாகவும், பரிசோதனைக்குப் பின் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
popular singer yesudas admitted hospital for health issue