மகா கும்பமேளா 2025; கின்னஸ் புத்தகத்தில் புதிய சாதனைகள்..! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசத்தில், பிரயக்ராஜில் மகா கும்பமேளா 2025 வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது. சூரியனைச் சுற்றி வியாழன் முழு சுற்றுப்பாதை சுழற்சியைக் குறிக்கும் ஒரு இந்து ஆன்மீக விழாவாக இந்த கும்ப மேளா நிகழ்வு பார்க்கப்பட்டது. 

கடந்த  ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26, 2025 வரை இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாகராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல் நிகழ்வு இடம்பெற்றது. உலகின் மிகப்பெரிய ஹிந்து ஆன்மீக பெருவிழாவாக இது கருதப்படுகிறது. மேலும் பிப்ரவரி 26 அன்று வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 660 மில்லியனுக்கும் அதிகமான (66 கோடி) மக்கள் புனித நீராட்டியுள்ளனர்.

மகா கும்பமேளா பல ஆண்டுகளாக நடைபெற்று வந்திருந்தாலும், 2025 நடைபெற்றது, ஜோதிடக் கணக்கீடுகளின்படி, தனித்துவமானது. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை அபூர்வமாகி நடக்கும் விண்மீன்களில் மாற்றங்களில் வந்த கும்ப மேளா நிகழ்வு இதுவாகும்.

அதாவது, ஒவ்வொரு கும்பமேளாவிற்கும் இடம் வியாழன், சூரியன் மற்றும் சந்திரனின் ஜோதிட சீரமைப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது.அதுதுடன், கும்பமேளா யுனெஸ்கோவால் அருவமான கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மஹா கும்பமேளாவில் புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டு, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளன.

ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் 80 அடி நீளம், 05 அடி அகல துணியில் 10,000 பேர் பங்கேற்று கையால் வரைந்த ஓவியம்; 15,000 துாய்மை பணியாளர்கள் இணைந்து ஒரே நேரத்தில் விழா நடந்த இடத்தில் துாய்மை பணி மேற்கொண்டது உள்ளிட்ட புதிய சாதனைகள் கின்னஸ் அமைப்பால் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டன. 

இதற்கான சான்றிதழை மாநில முதல்வரிடம் கின்னஸ் அமைப்பினர் வழங்கியுள்ளனர். இதற்கு முன் 10,000 பேர் ஒரே நேரத்தில் துாய்மை பணி மேற்கொண்டதே சாதனையாக இருந்தது. அது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

மேலும், ''நம்பிக்கை, ஒற்றுமை, சமத்துவத்தின் மிகப்பெரும் திருவிழாவான மஹா கும்பமேளா சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது. இதில், 66.21 கோடி பேர் பங்கேற்று புனித நீராடினர். பிரதமர் மோடி தலைமையின் கீழ் நடந்த இந்தத் திருவிழா, உலக வரலாற்றில் இதுவரை நடக்காத ஒன்று; மறக்க முடியாத ஒன்று என - உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத், தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maha Kumbh Mela 2025 New records in Guinness


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->