சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் குழந்தைகளை நடிக்க வைத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை.! - Seithipunal
Seithipunal


3 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை நடிக்க வைக்க கூடாது என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 3 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை நடிக்க வைக்கக் கூடாது.

3 மாதத்திற்கு மேல் உள்ள குழந்தையை நடிக்க வைக்க மாவட்ட ஆட்சியரிடம் தயாரிப்பாளர்கள் அனுமதி பெற வேண்டும். மேலும், குழந்தை நட்சத்திரங்கள் 6 மணி நேரத்துக்கும் மேலாகவும், இரவு 7 மணி முதல் காலை எட்டு மணி வரை பணியாற்ற அனுமதிக்க கூடாது. 

மேலும், கேலிக்கு ஆளாகும் பாத்திரங்களில் குழந்தைகளை நடிக்க வைக்க கூடாது. இந்த விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இல்லையெனில், 3 வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Making children act in movies and TV shows is punishable by 3 years imprisonment


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!


செய்திகள்



Seithipunal
--> -->