புலம்பெயர்ந்தோரின் கண்ணியத்தை பாதிக்கும் செயல்; ட்ரம்ப்-க்கு பாப் பிரான்சிஸ் கண்டனம்..!
Pope Francis condemns Trump deportation policy
சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான புதிய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்தியா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறிந்து அவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு அமெரிக்கா அனுப்பி வருகிறது.
இந்நிலையில், சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் டிரம்ப் நிர்வாகத்திற்கு கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, போப் பிரான்சிஸ் அமெரிக்க பாதிரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், 'இந்த நடவடிக்கை புலம்பெயர்ந்தோரின் கண்ணியத்தை பாதிக்கிறது. இது மோசமாக முடிவடையும்' என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போர், வறுமை மற்றும் காலநிலை பேரழிவுகளில் இருந்து தப்பிச் செல்பவர்களை பிற நாடுகள் வரவேற்று, பாதுகாக்க வேண்டும் என போப் ஆண்டவர், கோரிக்கை விடுத்து வருகிறார். மேலும் அரசாங்கங்கள் தங்கள் திறன் வரம்பிற்கு ஏற்றவாறு இதனை செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Pope Francis condemns Trump deportation policy