பொன்னியின் செல்வனுக்காக மணிரத்னம் சம்பள விவரத்தை கேட்டு வாய்பிளக்கும் கோலிவுட்.!  - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர்தான் மணிரத்தினம். இவர் நிறைய வெற்றி படங்களை இயக்கியிருக்கிறார். பல ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக வேண்டும் என்று முயற்சிகள் செய்து வந்தார். 

சமீபத்தில் தான் அதற்கான பலன் கிடைத்தது. ஒட்டுமொத்த இந்தியர்களின் எதிர்பார்ப்புக்கு இடையில் இந்த படம் உருவானது. இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெய்ராம், பார்த்திபன், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். 

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் சாதனை புரிந்து வருகிறது.

இயக்குனர் மணிரத்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதி.!! - Seithipunal

இதுவரை பொன்னியின் செல்வன் 1 பாகம் ஒன்று படம் உலகம் முழுதும் ரூ.350 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்காக இயக்குனர் மணிரத்தினம் வாங்கிய சம்பளம் குறித்து, தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. 

இந்த திரைப்படத்தில் சம்பள தொகையாக எதுவும் பேசவில்லையாம். படத்தில் கிடைக்கின்ற லாபத்தில் ஒரு பகுதியை அவர் சம்பளமாக வாங்க போவதாக ஏற்கனவே பேசி விட்டதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு பிரம்மாண்ட படைப்பை சம்பளத்தொகையே பேசாமல் அவர் இயக்கியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

maniratnam salary details for ps 1


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->