இயக்குனர் தங்கர் பச்சனின் குடும்பத்தில் ஒரு IAS அதிகாரி வந்தாச்சு!
UPSC Result Thangar Bachan Family student IAS
இன்று வெளியாகியுள்ள UPSC தேர்வு முடிவுகளில் தமிழகத்தை சேர்ந்த சிவச்சந்திரன் மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடம் பெற்றுள்ளார்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 134 பேரில் 50 பேர் 2024 யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்திய அளவில் 39ஆம் இடம் பிடித்த மோனிகா என்பவரும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றுள்ளார்.
இந்த நிலையில், இயக்குனர் தங்கர் பச்சனின் குடும்பத்தை சேர்ந்த ஒருவரும் இந்திய அரசுப்பணித் தேர்வில் இந்திய அளவில் 125 இடத்தைப்பிடித்து IAS தேர்வாகி உள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "என்னுடைய மூத்த அண்ணன் செல்வராசு அவர்களின் பெயர்த்தி (பேத்தி) சரண்யா சரவணன் இந்திய அரசுப்பணித் தேர்வில் இந்திய அளவில் 125 இடத்தைப்பிடித்து IAS தேர்வாகி உள்ளார்.
எனது ஊர் பத்திரக்கோட்டைக்கும் கடலூர் மாவட்டத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
தன்னை உருவாக்கிய இம்மண்ணுக்கும் இம்மக்களுக்கும் மிகச்சிறந்த சேவை ஆற்றிட வாழ்த்துகிறேன்!
English Summary
UPSC Result Thangar Bachan Family student IAS