நாடகக்காரி என்பதால் சிறுவயதில் அவமானப்படுத்தப்பட்ட பிரபல நடிகை.! அவரே வெளியிட்ட வேதனை தகவல்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் நித்யா ரவிந்திரன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பின்னர் நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் நித்யா ரவீந்திரன் நீடித்து வருகிறார். சீரியல்களிலும் நிறைய திரைப்படங்களிலும் குணசித்திர கதாபாத்திரங்களில் நித்யா நடித்து வருகின்றார்.

சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், குழந்தை நட்சத்திரமாக இருந்ததால் தன்னை மற்றவர்கள் எப்படி மோசமாக நடத்தினார்கள் என்பது குறித்து பகிர்ந்துள்ளார். 

அதில், "பள்ளி முடிந்தவுடன் என்னுடன் படிக்கும் மற்ற குழந்தைகள் அனைவரும் விளையாட செல்வார்கள். நான் நாடகம் நடிப்பதற்காக சென்றுவிடுவேன். நான் நடிக்கின்ற காரணத்தால் பொய் பேசுவேன் என்று மற்ற பெற்றோர்கள் அந்த குழந்தைகளை என்னிடம் பழக விட மாட்டார்கள்.

ஆனால் என்னுடைய தோழிகள் குழந்தைகள் என்பதால் தனது பெற்றோர் கூறிய பொய்யான அறிவுரைகளை அவர்கள் தெரிவித்து விடுவார்கள். ஒரு காலத்தில் நடிகர் நடிகைகள் என்றாலே மிகவும் மோசமான புத்தி கொண்டவர்கள் என்று விமர்சிப்பார்கள்." என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

மேடை நாடகங்களில் நடித்த நித்யா ரவீந்திரன் சிறந்த குணச்சித்திர நடிகையாக 45 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரையில் திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் எஃப்எம் ஒன்றில் இயக்குனராக பொறுப்பு வகித்து வருகின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nithya ravindhar about her Childhood


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->