கதாநாயகனுக்கு பதிலடி கொடுத்த நிவின் பாலி பட தயாரிப்பாளர்.!  - Seithipunal
Seithipunal


மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நிவின்பாலி. இவர் நடிப்பில் உருவான பிரேமம் திரைப்படம்  மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது  தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மத்தியிலும் இவரை பிரபலமாக்கியது. இதனைத் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்த இவர் நடிப்பில் உருவாகயிருக்கும் துறைமுகம் திரைப்படம் இந்த வாரம் வெளியாகி இருக்கிறது.

இத்திரைப்படத்தை கம்மட்டி பாடம் உட்பட வெற்றி படங்களை இயக்கிய ராஜீவ் ரவி  இயக்கியிருக்கிறார். 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட திரைப்படம் பல்வேறு சிக்கல்களையும் தாண்டி தற்போது வெளியாகியிருக்கிறது. இத்திரைப்படத்தின் ப்ரோமோ நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நிவின்பாலி  தயாரிப்பாளரின் இயலாமையால் தான் திரைப்படம் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது என குற்றஞ்சாட்டியிருந்தார்.

தற்போது படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுகுமார் தெக்கேபாட்  படத்தின் ஹீரோ நிவின் பாலி பதிலடி கொடுக்கும் வகையில் பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் சாதாரண ஒரு தயாரிப்பு நிர்வாகியாக சினிமாவில் தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கியதை குறிப்பிட்டவர் பல்வேறு சிக்கல்களுக்கும் துரோகங்களுக்கும் மத்தியில்  இத்திரைப்படத்தினை முடித்து ரிலீஸ் செய்திருப்பதாக தெரிவித்தார்.

இத்திரைப்படம் தாமதமானதற்கு  படத்தில் பணியாற்றிய பலரும் தன்னையே குற்றம் சொல்வதை ஏற்றுக்கொண்ட அவர் சில நிர்வாக சிக்கல்களாலும் பணப்பிரச்சினைகளாலும் இத்திரைபடம் இவ்வளவு தாமதமானதாக தெரிவித்துள்ளார்.

இந்த பேட்டியில் அவர், தான் சினிமாவை மிகவும் காதலிக்கிறேன் எனக்கூறிய அவர், சாகும் வரை சினிமாவில் தான் இருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். திரைப்படத்திற்கு பல்வேறு வகையிலும்  முட்டுக்கட்டைகளை போட பலர் முயற்சித்ததாகவும் தெரிவித்துள்ளார் அவர். மேலும் அவர்களின் பெயர்களை தான் இங்கு வெளியிடப் போவதில்லை எனவும் தெரிவித்தார். 

அதே நேரம் பலர் இந்த இக்கட்டான காலகட்டத்தில் தனக்கு உதவியிருப்பதாக தெரிவித்த அவர் அவர்களின் பெயர்களையும் இங்கு நான் குறிப்பிடப் போவதில்லை என தெரிவித்திருக்கிறார். இந்தப் பேட்டியின் ஒரு இடத்தில் கூட அவர் படத்தின் கதாநாயகன் நிவின்பாலியின் பெயரை பயன்படுத்தவில்லை. இதிலிருந்து தயாரிப்பாளரின் கருத்துக்கள் மறைமுகமாக நிவின்பாலியை தாக்கி அவருக்கு பதிலடி கொடுத்ததாகவே தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nivin pauly film producer indirectly hit back towards him


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->