ஆபாச உடை விவகாரம்.. பிரபல நடிகை கைது.. உண்டான பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியில் பல சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை உர்பி ஜாவத். இவர் இந்தி பிக் பாஸிலும் கலந்து கொண்டிருக்கிறார். புச் பீட் எனும் வெப் சீரியஸில் இவர் நடித்திருக்கிறார். 

சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் இந்த சீரியல் நடிகை அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இதன் காரணமாக, அவருக்கு நிறைய ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் பாலோயர்களாக இருக்கின்றனர்.

அவர் பொது இடங்களில் கூட ஆபாசமாக உடை அணிந்து வருகின்றார். இதையெல்லாம் கவனித்த மும்பை அந்தேரி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரான அலி காசிப்கான் தேசந்த என்ற நபர் ஒரு உர்பி ஜாவோத் மீது புகார் கொடுத்தார்.

இந்த நிலையில் தற்போது நடிகை உர்ஃபி ஜாவத் துபாய்க்கு சென்று அனுமதி இன்றி ஆபாச உடைய அணிந்து போட்டோ சூட் நடத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்த போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். 

தற்போது துபாய் சென்றுள்ள உர்ஃபி அங்கு பொதுமக்கள் கூடும் இடத்தில் அனுமதி இன்றி போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். அதுவும் ஆபாச உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உர்ஃபி இந்திய பிரஜை என்பதால் இந்திய காவல்துறையுடன் கலந்து பேசிய பிறகே அவர் மீது கைது நடவடிக்கை இருக்கும். தற்போது விசாரணை வளையத்திற்குள் மட்டுமே இருக்கிறார். இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டாலோ, அல்லது உர்ஃபி எழுத்துபூர்வமாக மன்னிப்பு கேட்டாலோ அவர் விடுவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Obscene dress issue Famous actress arrested There was a stir


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->