ராமாயணம் படத்தில் என்ட்ரி கொடுக்கும் பிரபாஸ் - வெளியான முக்கிய தகவல்..! - Seithipunal
Seithipunal


நிதிஷ் திவாரி இயக்கத்தில் தயாராகும் ராமாயணம் படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி நடிக்கின்றனர். ராவணனாக கன்னட நடிகர் யாஷ் நடித்து வரும் இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

மேலும் இந்த படத்தில் அனுமானாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் நடிக்கின்றனர். மூன்று பாகங்களாக உருவாகி வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒரு பான் இந்தியா படமாக உருவாகிறது. 

சமீபத்தில் இந்தப் படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், இந்தப் படம் 2027-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், 'ஆதிபுருஷ்' படத்தில் ராமராக நடித்த பிரபாஸ், நிதிஷ் திவாரி இயக்கும் 'ராமாயணம்' படத்தில் பரசுராமராக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ராம அவதாரத்துக்கு முன்பு உள்ள பரசுராம அவதாரம், இந்த படத்தில் முக்கிய காட்சிகளாக இடம்பெறுவதால் ராமர் கதாபாத்திரத்துக்கு இணையாக அது இருக்க வேண்டும் என்று கருதி பிரபாஸை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். 

பிரபாஸுக்கும் இந்த கதாபாத்திரம் பிடித்து இருப்பதால் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராமாயணம் படத்தில் பிரபாஸ் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prabhas joined ramayanam movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->