இடைத்தேர்தல்: அதிமுகவை தொடர்ந்து அதிர்ச்சி கொடுத்த தேமுதிக! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுகவைத் தொடர்ந்து அதன் கூட்டணி கட்சியான தேமுதிகவும் அறிவித்துள்ளது. 

ஜனநாயகத்திற்கு விரோதமாக நடக்கும் இந்த இடைத்தேர்தல் மீது நம்பிக்கை இல்லை என்று தேமுதிக புறக்கணிப்பதற்கு உண்டான காரணத்தை காரணமாக தெரிவித்துள்ளது. 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக திமுக நேரடியாக களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளராக சந்திரசேகர் அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை, புறக்கணிக்கிறது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இதேபோல் அதன் கூட்டணிக் கட்சியான தேமுதிகவும் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. தற்போது களத்தில் திமுக நாம் தமிழர் கட்சி மட்டுமே உள்ளன. பாஜக நேரடியாக களமிறங்குமா? அல்லது அதன் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் களமிறங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode East by election 2025 ADMK dmdk statementstatement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->