தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட தமிழக சட்டசபை - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


கடந்த 6-ந்தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டம் தொடங்கியது. ஒவ்வொரு வருடமும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது வழக்கம். அதன் படி சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சட்டசபைக்குள் நுழைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, உரையாற்றாமல் அவையில் இருந்து வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதன் பிறகு சட்டசபை முன்னாள் உறுப்பினர் மறைவு குறித்து இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து சட்டசபையில் வினாக்கள்-விடைகள் நேரத்தில் சட்டசபை உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். 

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று சட்டசபையில், பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை மற்றும் தண்டனையை அதிகரிக்கும் இரண்டு சட்ட மசோதாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்திருந்தார். 

இந்த சட்ட மசோதாக்கள் மீது சட்டசபையில் இன்று எம்.எல்.ஏ.க்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த சட்டமுன்வடிவு இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தா நிலையில் சபாநாயகர் அப்பாவு தமிழக சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

assembly speaker appavu postpond assembly meetting untill date


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->