"ஸ்ரீமதி க்கு நீதி வேண்டும்." தைரியமாக வாய் திறந்த பிரபல நடிகை.! பாராட்டும் நெட்டிசன்கள்.!
priya bavani shankar about srimathi case
கள்ளக்குறிச்சி கணியமூர் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்ம மரணம் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்த என்ற மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கடந்த 17ஆம் தேதி பள்ளி பேருந்துகள் மற்றும் பள்ளி கட்டிடங்களை அடித்து உதைத்து பலர் கலவரத்தில் ஈடுபட்டனர்.
![](https://img.seithipunal.com/media/Priya Bhavani.jpeg)
இதுகுறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் வாதிகள் யாருமே இதை கண்டுகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
இதற்கிடையில் நடிகை பிரியா பவானி சங்கர், "ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்." என்று கூறி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். பிரபலங்கள் அனைவரும் இந்த பிரச்சனையில் மௌனம் காக்கும் நிலையில் தைரியமாக பிரியா பவானி சங்கர் பதிவிட்டு இருப்பது பலரிடமும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
English Summary
priya bavani shankar about srimathi case