லோகேஷ் கனகராஜ் படத்தின் அப்டேட்டை அள்ளிக்கொடுத்த ரஜினி!
Rajini 171 film update
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ''வேட்டையன்''. இந்த திரைப்படத்தில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் ரஜினியின் 171வது திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் ரஜினியின் இளமை தோற்றத்திற்காக டீ ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ரஜினியின் 171 வது திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி,
''வேட்டையன்'' படபிடிப்பிற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.