"அது ரகசிய திருமணம் இல்லை"! ரோஜா சீரியல் கதாநாயகி தனது திருமணம் குறித்து விளக்கம்! - Seithipunal
Seithipunal


ரகசிய திருமணம் நடைபெற்றதாக வந்த தகவல்களுக்கு  தற்போது விளக்கம் அளித்திருக்கிறார் ரோஜா சீரியலின் மூலம் பிரபலமான பிரியங்கா நல்காரி.

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம்  சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர் 2010 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சம்திங் சம்திங், தீயா வேலை செய்யணும் குமாரு,  காஞ்சனா 3 போன்ற  தமிழ் திரைப்படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

சினிமாவில் பெரிய பிரேக்கில்லாத காரணத்தால் சின்னத்திரைக்கு வந்த இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மிகப்பெரிய ஆதரவை கொடுத்தது. இந்த சீரியலின் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர். இந்நிலையில் இவர் மலேசியாவிலுள்ள முருகன் கோவில் ஒன்றில் ஒருவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

தற்போது அதற்கு விளக்கமளித்து இருக்கிறார் பிரியங்கா நல்காரி. தனது திருமணம் குறித்து தெரிவித்துள்ள அவர்கள் இது ரகசிய திருமணமல்ல என்றும்  வீட்டின் சம்மதத்தோடு தான் தாங்கள் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் தொழிலதிபர் ராகுலின் வீட்டில் இந்த திருமணத்திற்கு சம்மதம்  தெரிவிக்கவில்லை எனவும் அவர்களும் எங்களை ஏற்றுக் கொண்ட பின்  திருமணத்தை பெரிய விழாவாக கொண்டாடுவோம் எனவும் தெரிவித்திருக்கிறார் பிரியங்கா நல்காரி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

roja fame prianka nalkari speaks about her marriage


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->