புஷ்பா 2 படத்தில்.. இணைந்த பிரேமம் பட நடிகை.! அட இந்த கேரக்டரா.?!  - Seithipunal
Seithipunal


டோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கின்ற அல்லு அர்ஜூன். இவருடைய நடிப்பினில் கடந்த 2021 ஆம் வருடத்தில் வெளியாகிய திரைப்படம் தான் புஷ்பா. இந்த திரைப்படத்தை தொடர்ந்து, புஷ்பா 2 திரைப்படத்தில் சுகுமார் இயக்கத்தினில் தற்பொழுது நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து வருகின்றார்.

இதன் முதல் பாகமானது ரூ.350 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், புஷ்பா 2 திரைப்படமும் அதிக வசூல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி தற்போது இணைந்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு அவர் 10 நாட்கள் வரை கால்ஷீட் ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது.  

புஷ்பா 2 திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் சர்ப்ரைஸ் என்று படகு சார்பில் கூறப்பட்டாலும் அவர் ஒரு பழங்குடியின பெண்ணாக சிறப்பு கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. வருகின்ற ஏப்ரல் எட்டாம் தேதி அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு படகுழு முக்கிய அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sai pallavi In pushpa 2 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->