கமலஹாசனுடன் கைகோர்த்த சாய் பல்லவி..! வெளியானது அசத்தல் அப்டேட்.!
Sai pallavi next movie with kamal and Sivakarthikeyan
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான டாக்டர் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. அடுத்ததாக இவர் டான் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
டான் படமும் டாக்டர் படத்தை போலவே முழுக்க முழுக்க நகைச்சுவையை உள்ளடக்கியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க அனிருத் இசையமைத்திருந்தார்.
இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். வரும் மே 13 ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க இருக்கிறார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
English Summary
Sai pallavi next movie with kamal and Sivakarthikeyan