நடன நிகழ்ச்சியில் குத்தாட்டம் போடும் சாய் பல்லவி.! பழைய வீடியோ திடீர் வைரல்.!
Sai pallavi Old dance program video
கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் சாய் பல்லவி. இந்தத் திரைப்படத்திற்கு முன்பு நிறைய படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் சாய்பல்லவி நடித்துள்ளார்.
தற்போது அவர் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சிறந்த நடிகையாக மிளிர்ந்து வருகிறார். சாய்பல்லவி தமிழில் தியா படத்தின் மூலம் ஹீரோயினாக அடி எடுத்து வைத்தார்.
பின்னர் தமிழில் மாரி 2, என் ஜி கே மற்றும் பாவ கதைகள் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சாய்பல்லவிக்கு தமிழை விட தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஃபிடா திரைப்படத்தில் சாய்பல்லவி தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் .
சமீபத்தில் நடிகை சாய் பல்லவி நாக சைதன்யாவுடன் இணைந்து லவ் ஸ்டோரி படத்தில் நடித்து இருந்தார். தற்போது பல ஆண்டுகளுக்கு முன்பு நடன நிகழ்ச்சி ஒன்றில் அசத்தலாக நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரவேற்பை பெற்று வருகிறது.
English Summary
Sai pallavi Old dance program video