சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி.. அசத்தல் அப்டேட்.!
Sai pallavi pair with sivakarthikeyan 21 movie
கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். திரைப்படங்கள் அதிகமாக குடும்ப சென்டிமென்ட் அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும். எனவே இவரது திரைப்படங்களுக்கு எப்பொழுதும் குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் 21 வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிக்க உள்ளார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற உள்ளதாகவும் சிவகார்த்திகேயனுக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
English Summary
Sai pallavi pair with sivakarthikeyan 21 movie