செவ்வந்தி புகழ் திவ்யா ஸ்ரீதர் குழந்தைக்கு தாயானார்.! இன்ஸ்ட்டா வில் உணர்வுபூர்வமான பதிவு! - Seithipunal
Seithipunal


சன் டிவியில் ஒளிபரப்பான செவ்வந்தி சீரியல் மூலம்  ரசிகர்களிடம் பிரபலமானவர் திவ்யா ஸ்ரீதர். இவருக்கு இன்று பெண் குழந்தை பிறந்ததாக  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

தொலைக்காட்சி சீரியல் நடிகையான திவ்யா ஸ்ரீதர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லம்மா என்ற தொடரில் நாயகனாக நடித்து வரும் அர்ணவ் தன்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் தொடர்பாக அதிகாரிகள் இருதரப்பிலும் விசாரித்து வந்த நிலையில் வழக்கில் ஜாமீன் பெற்ற அர்ணவ் வழக்கை நீதிமன்றத்தில் சந்தித்து வருகிறார். மேலும் திவ்யா ஸ்ரீதருக்கு ஆறு வயதில் ஒரு குழந்தை இருப்பதாகவும் அந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டது.

இவர்கள் இருவருக்குமிடையே நடைபெற்ற விஷயங்கள் பற்றி சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு உள்ளாகின. இந்நிலையில் கர்ப்பமாக இருந்த திவ்யா ஸ்ரீதருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது இன்ஸ்ட்டாகிராம் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இனி என் மகள் தான் என் வாழ்க்கைக்கு எல்லாமே எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sevanhi fane dhivya sridhar bessed with a baby girl shares the moment on insta


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->